திருபுள்ளபூதங்குடியின் நீர்வளம்


ஆழ்வார்களின் பாசுரங்கள் கற்பதற்கு இனிமையாவை. அதற்கு ஆசார்யர்களின் பொருள் விளக்கங்கள் மேலும் இனிமை சேர்ப்பவை. அப்படி ஒரு திருமங்கையாழ்வார் பாசுரம்,

கள்ளக் குறளாய் மாவலியை
வஞ்சித்து உலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப்
பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும்
புள்ளம் பூதங் குடிதானே (பெரிய திருமொழி 5-1-2)

இதன் திரண்ட பொருளானது – வாமன உருவை எடுத்துத்கொண்டு மாவலியை வஞ்சித்து மூவுலகத்தை அளந்தவனும், முதலையிடம் சிக்கிய கஜேந்தராழ்வானின் துயரைப் போக்கியவனுமாகிய புனிதன் எழுந்தருளியிருக்கும் புள்ளம்பூதங்குடியானது, தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருக்க, அங்கு பறவைகள் தங்கள் குட்டிகளுக்கு மீன்களை தேடிக்கொண்டிருக்கின்றன.

ஆலவாயன் என்ற புலவர் பராசர பட்டர் காலத்தில் இருந்தார். அவர் பட்டரிடம், பாசுரத்தில்(பள்ளச் செறுவில் கயல் உகள) மீன்கள் நிறைய உள்ளன, அப்புறம் ஏன் பறவைகள் உணவிற்காக தேடின? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பட்டர், நீர் கற்றவராயினும், சொற்களின் போக்கை அறியவில்லை. கழனியில் உள்ள மீன்கள் நீரின் மிகுதியால் தூணும் துலாமும் போல தடித்திருக்கின்றன. அப்பபெரிய மீன்கள் குட்டிகள் வாயில் நுழையாது. எனவே, குட்டிகளி்ன் வாயில் நுழையக்கூடிய மீன்களைத் தேடின என்ற அழகிய சமாதானமளித்தார்.

சாஸ்திரங்கள் நம்முடைய அறிவிற்கு கடினமான நிறைய அர்த்தங்களைத் தெரிவிக்கின்றன. பறவைகள் போன்ற ஆச்சாயர்கள், தங்களுடைய குட்டிகள் போன்ற நமக்கு, அர்த்தங்களைத் தேடித்தேடி எளிய முறையில் நமக்குத் தருகி்ன்றனர்.

இராமனின் குறும்பும், கண்ணனின் பெயரும்!


திவ்யப்ரபந்த்திற்கு உரை எழுதிய வ்யாக்யான கர்த்தாக்கள் பல இடங்களில் சுவையான உவமைகள்,உதாரணங்களை காட்டிப் பொருளை எளிதாகப் புரிய வைப்பர். அப்படியொரு சுவையான உதாரணம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியியில் 1-5-5 பாசுர உரையில் உள்ளது.

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்

தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.

திருவாய்மொழி(1-5-5)

இப்பாசுரத்தை மேலோட்டமாகப் படித்தால் திருமாலின் பெருமைகளை சொல்லி அவன் திருவடிகளை அடைய அவன் திருவருள்  பண்ண வேண்டும் என்று பொருள் படும்.

இதற்கு இரு வகையான உரைகள் உண்டு. இரண்டாவது உரை,

இதில் “கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!” என்னும் இடத்திற்கு பொருள், ஸ்ரீராம அவதாரத்தில், ஸ்ரீராமன் சிறுவனாக விளையாடும் போது, கூனி என்னும் மந்தரை முதுகில் உண்டைவில் கொண்டு நோவும்படியாக எயிதினான். அதனால் வருத்தமுற்ற மந்தரை, இதற்கு காலம் வரும்போது பதிலடி கொடுப்போம் என்று நினைவு கொண்டிருந்தாள்.

இப்படி இராமனின் கதையை சொல்லும் காகுத்தா என்று அவன் திருநாமத்தை சொல்லாமல் கோவிந்தன்(பசுக்களை மேய்ப்பவன்) என்னும் கிருஷ்ண நாமத்தை என் சொல்ல வேண்டும் என்ற சந்தேகத்திற்கு, நம்பிள்ளை தன் ஈடு உரையிலே சமாதானம் தெரிவித்தார்,

“அன்றிக்கே, தீம்பு சேருவது க்ருஷ்ணனுக்கே யாகையாலே

*போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்னுமாபோலே

அவன் தலையிலே ஏறிட்டுச் செல்லுதல்”

நம்பிள்ளை ஈடு

அதாவது குணக்கடல் ஸ்ரீராமனை சொல்லாமல், சிறிய வயதில் பல குறும்புகளை செய்த கண்ணனோடு இதையும் சேர்த்துச்  சொல்லலாம் என்று ஆழ்வார் திருவுள்ளம் என்கிறார் நம்பிள்ளை. இதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் காட்டுகிறார்.

கள்ளன் (திருடன்) ஒரு பிராமணனின் வீட்டில் திருட, வீட்டின் தோட்டத்துப் பக்கத்தில் அன்று புதிதாக கட்டப்பட்ட சுவற்றில் தடியை வைத்தான். அது ஈரச் சுவர்  ஆகையால், சுவர் இடிந்து அவன் மேல் வீழ்ந்து இறந்து விட்டான். அந்த திருடனின் உறவினர் தங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அரசனிடம் முறை இட்டான். அந்த அரசனோ அவிவேகி. திருடனின் இறப்பிற்கு காரணம், ஈரச்சுவர் வைத்த  பிராமணன் தான் காரணம் என்றான்.அந்த பிராமணனை விசாரித்தப்போது , ஈரச்சுவரை வைத்தது தானில்லை,  கொத்தனார் என்றான். அவனை அழைத்து அரசன் விசாரிக்க, அவனோ தண்ணீர் விடுகிறவன் அதிகமாக விட்டான், நான் காரணமில்லை என்று சொல்ல, தண்ணீர் விட்டவனை அரசன் விசாரித்தான். அவனோ ,தண்ணீர் பானை பெரியதாக இருந்தது என்று  சொல்ல, குயவனை விசாரிக்க, அவன், நான் பானையை சிறியதாகச் செய்ய நினைத்தேன், அந்த பக்கம் வந்த ஒரு பெண்ணைப் பராக்கு பார்த்துக் கொண்டே செய்ததால் பானை பெரியதாகி விட்டது என்றான்.

அந்த பெண்ணை விசாரித்தப் போது அவள் சொன்னாள்,  நான் சலவை செய்ய துணி கொடுத்த வண்ணனான் சொன்ன நேரத்தில் வராததால் நானே அந்தப்பக்கம் சென்றேன் என்றாள். வண்ணானை கூப்பிட்டு விசாரித்த அரசன், நான் தினமும் துணித் தோய்க்கும் கல்லில் அன்று ஒரு அமணன் உட்காந்திருந்தான், எவளோ எழுப்பியும் போகவில்லை, அவனே எழுந்து போனபிறகு, நான் துணித் தோய்க்க  தாமதமாகிவிட்டது என்றான். அமணனை கூப்பிட்டு விசாரித்தான். அமணன், மௌனச்சாமியார் என்பதால் அரசன் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதில் தெரிவிக்கவில்லை. மறுப்புச் சொல்லாததால், அந்த திருடன் இறப்பிற்கு இந்த அமணன் தான் காரணம், இவனிற்கு சிரச்சேதம் தண்டனை என அரசன் தீர்ப்பளித்தான்.

அமணன் குற்றம் செய்யாதபோதிலும் அவன் தண்டனை அனுபவித்ததைப் போன்று, கண்ணன் செய்யாத தீம்பும் அவன் தலையில் ஏறியது.

Dog, Owner and Sriman Narayana


Recently, I went to a Thirukannamanagi divyadesam for the first time.

I wanted to visit this temple ever since i heard stories 10 years back. Thirukannamangai is a village in thiruvarur district,Tamil nadu.

This Divya desam dedicated to Vishnu sang by Thirumanagi Azhwar. Vishnu worshipped here as Bhaktavatsalan. One of the verses goes like-

பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்
பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை
வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை
மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே

means,

The sweet Pann(music), the sweetness of Pann(essence of music), the Ghee in milk, the adorable form in Vaikunta, the radiant form, the sacrifice, the light of the lamp, the Earth, the mountains, the deep waters, the rising Moon, dear as eyes to Vedic seers, -formy fill, I sought and found him Kannamangai.

One of the stories which interested me was the story of Thirukannamangai Aandan. Thirukannamangai Aandan, a sishya of Nathamunigal who lived in Thirukannamangai.

He saw two dogs started fighting, one dog was killed by another over the fight. On knowing this, owners of the dog started fighting each other. The fight reached a point where one of the dog owners killed the other one with a knife in response for killing of the dog. Thirukannamangai Aandan observed that if the owner can go that much far with a sense of ownership to protect his dog, being a creator, there are no limit that Sriman Narayana would go to protect us. On realizing this, Thirukannamangai Aandan performed surrender to the Bhakthavatsala perumal of thirukannamangai and spent rest of his life doing service to the Perumal.

His Birthday on (Sravanam in Aani month) is celebrated every year.

This story I heard long ago inspired me to visit the temple and especially to have a Thirukannamangai Aandan.

I went to the temple in the evening. Being a remote village, the temple didn’t attract devotees in the weekdays. There were less than 10 people including myself, priest and his assistance. I had a darshan of the Bhakthavatsala perumal and came out to the outer prakaram. For a moment I forgot to remember about to going Thirukannamangai Aandan sannidhi for darshan. I even did not know where the sannidhi in the temple.

When I came out from the inner sanctum, saw a board said “sembhaga vanam”, meaning champaca garden. It is a temple garden with the gate in the half-opened state. In general, garden in south Indian temples are sacred, only authorised people would go and get flowers for pooja. Usually I would not step into such places. However, my curiosity and inner voice forced me to get into the garden.

I crossed the gate and went into the garden and witnessed a few trees, plants and a huge wall on the sides. There was not much flowers to spot and that time I was not sure if public can get into. There was no one except me in the garden. After going halfway, for a moment I thought about returning back as I am wary of insects and snakes. Then I remembered the observation of Thirukannamangai Andaan and said to myself that there is nothing to worry since I am in temple and vicinity of Bhakathavatsala Perumal who is the protector. Then I proceeded to walk forward to enjoy the scenery.

When I went to the parallel side of the garden, I saw Thirukannagamangai Andaan thiruvarasu and deity in the garden and I stunned for a moment then realised, even though I forgot the primary goal of my visit to the temple and but Swami himself shown the way and I had a blissful darshan. If i did not enter garden like place, 10-year-old goal would have not have been accomplished and never know when I will go to the Divyadesam again.

Thirukannamangai Andaan

But Divyadesam requires repair, proper maintenance and especially manpower to do daily activities.

Plan to visit the temple at-least once –

Temple location on map

Few photos from internet

Magento Rename Admin Path After Installation


Magento rename admin path

Changing admin path name is one of the important steps to secure your magento store.There is an option to change default admin path during installation.But you can also rename admin path after installation.

To rename admin path,

Goto to /app/etc and  open local.xml file.

Find the text ![CDATA[admin]] in the file(around line no.57).This is the default admin path.

Change admin name to some other name like mystore and save it.

So it will look like ![CDATA[mystore]] and admin url will be

http://www.your-domain.com/mystore

——————

For Magento 1.4.1.1

 

சென்னை அன்றும் இன்றும்-3


சென்னை (1980)
சென்னை (2010)
கரும்பு ரூ. 1 ரூ. 15
பச்சரிசி 1 கிலோ ரூ. 4.50 ரூ. 40
கருப்பட்டி 1 கிலோ ரூ. 3 ரூ. 60
வாழைப்பழம்(2) ரூ. 0.50 ரூ. 4
வெல்லம் 1 கிலோ ரூ. 6.50 ரூ. 45
மஞ்சள்கொத்து ரூ. 0.50 ரூ. 25
பொங்கல் பானை(2 கிலோ அளவு) ரூ. 2 ரூ. 30
நாட்டுச் சக்கரை 1 கிலோ ரூ. 5 ரூ. 40
முந்திரி 100 கிராம் ரூ. 8 ரூ. 45
திராட்சை 100 கிராம் ரூ. 5 ரூ. 20

நன்றி:அவள் விகடன் இதழ்

Magento Remove Currency Selector


Go to app/design/frontend/{Your Interface}/{Your theme}/layout/directory.xml
Find the code around line no 44 that looks like this

    <catalog_category_layered>
        <reference name="left">
            <block type="directory/currency" name="currency" before="catalog.leftnav" template="directory/currency.phtml"/>
        </reference>
    </catalog_category_layered>

Comment the code

——————

For Magento 1.4.1.1

I Point To India


Max Muller,a German philologist  was invited by Cambridge University to give lecture to British candidates  preparing for Indian civil service,he spoke,

…What i feel convinced of, and hope of convince you, is that sanksrit language, if studied in right spirit, is full of human interests, full of lessons which even Greek could never teach us, a subject worthy to occupy the  leisure, and more than the lesiure, of every Indian civil servant.

If i were to look over the whole world to find out the country most richly endowed with all the wealth, power and beauty and the nature can bestow- in some parts a very paradise on earth – i should point to India.If i were asked under  what sky human mind has developed some of its choicest gifts, has most deeply pondered on the greatest problems of life, and has found the solutions of some of them which well deserve the attention  even of  those studied Plato and Kent – i should point to India

Magento Blank Theme Installation Problem


After installing blank theme in magento,an error will appear like this,

Fatal error:Call to a member function toHtml() on a non-object in /app/code/core/Mage/Core/Model/Layout.php on line 529

To fix this error,go to /app/design/frontend/default/blank/layout/ and open page.xml file.

Find the code around line no 89, which looks like this,

<block type="core/profiler" output="toHtml" />

Change it to

<block type="core/profiler" output="toHtml" name="core_profiler"/>

சென்னை அன்றும் இன்றும்-2


சென்னை (1990)
சென்னை (2010)
இட்லி (2) ரூ.1 ரூ.10
வடை 30 பைசா ரூ.5
தோசை ரூ 1.50 ரூ 12
மசால்தோசை ரூ 2.00 ரூ 16
வடைகறி 60 பைசா ரூ 10
சப்பாத்தி ரூ 2.50 ரூ 18
பரோட்டா ரூ 2 ரூ 16
பொங்கல் ரூ 2 ரூ 14
பூரி(கிழங்கு) ரூ 1.50 ரூ 14
டீ 60 பைசா ரூ 6
காபி ரூ 1.50 ரூ 14

நன்றி:அவள் விகடன் இதழ்